பங்குச் சந்தை வெற்றியாளர் ராகேஷ் ஜூன் ஜூன்வாலா

 பங்குசந்தையில் 5000 ரூபாயில் முதலீட்டை ஆரம்பித்து இன்று 8250 கோடி ரூபாய்க்கு அதிபதியாக உள்ள  இந்தியாவின் வாரன் பஃப்பேட்... ராகேஷ் ஜுன்ஜுன்வாலா

அவரது பங்கு சந்தை வரலாறு நம்மில் பலருக்கு அனுபவ பாடமாக, ஊக்கமாக இருக்கும் என்பதால் இந்த பதிவினை இடுகிறோம்.

ஜுன்ஜுன்வாலா மும்பையில் வருமான வரி அதிகாரிக்கு மகனாக பிறந்தவர். அவர் தந்தை நிதித்துறையில் இருந்ததால் பங்குச்சந்தையில் ஆர்வமாக இருந்தார். தந்தை நண்பர்களுடன் பங்குகள் பற்றி பேசும் போது இவரும் ஆர்வமாக கேட்பார். ஒரு நாள் தந்தையிடம் ஏன் பங்குகள் விலை மாறிக் கொண்டே இருக்கிறது என்று கேட்டார்.

அவர் தந்தை செய்தித்தாளை கொடுத்து "Gwalior Rayon" என்ற நிறுவனத்தைப் பற்றி ஏதாவது செய்தி இருக்கிறதா என்று கேட்டார். செய்தியும் இருந்தது. அடுத்த நாள் அதன் பங்கு விலையிலும் மாற்றம் ஏற்பட்டது. இது ஒரு வித ஆர்வத்தை ஏற்படுத்தியதால் சொந்தமாக பங்குச்சந்தை பற்றி பயில ஆரம்பித்தார்.

1985ல் "Chartered Account" படிப்பினை முடித்தார்.அதன் பிறகு அதாவது தமது 25வது வயதில் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் சென்செக்ஸ் 150 புள்ளியில் இருந்தது. முதல் பெரிய லாபத்தினை '86ல் "TATA TEA" நிறுவனம் மூலம் பெற்றார். ஒரு பங்கினை 43 ரூபாய்க்கு வாங்கி 3 மாதத்தில் 143 ரூபாய்க்கு விற்றார். இவ்வாறு 5000 பங்குகள் வாங்கி இருந்தார். அதனால் 5 லட்சம் ரூபாய் லாபம் கிடைத்தது. அடுத்த 3 ஆண்டுகளில் பங்கு வர்த்தகம் மூலம் 20~25 லட்சம் ரூபாய் கிடைத்தது.

அதன் பிறகு அடுத்த பெரிய லாபம் "SESA GOA" என்ற நிறுவனம் மூலம் கிடைத்தது. இந்த நிறுவனம் அந்த சமயத்தில் இரும்புத் தாது உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டதால் கடுமையாக பாதிக்கப்பட்து 20~25 ரூபாய்க்கு குறைந்த விலையில் விற்கப்பட்டது. ஆனால் இவர் நிறைய தரவுகளை வைத்து பார்த்து அடுத்த வருடம் நல்ல லாபம் வரும் என்று எதிர் பார்த்தார்.

மற்றவர்கள் நம்ப மறுத்த நிலையில் இவர் துணிச்சலுடன் முதலீடு செய்தார். 4 லட்சம் பங்குகளை ஒரு கோடி மதிப்பிற்கு வாங்கினார்.  பங்குகள் 60~65 ரூபாய்க்கு சென்ற போது 2 லட்சம் பங்குகளை விற்றார். 1 லட்சம் பங்குகளை 150-175 ரூபாய்க்கு விற்றார். மற்ற பங்குகளை 2200 ரூபாய்க்கு விற்றார். இதன் மூலம் தனது மூலதனத்தை கோடிகளின் மடங்காக்கினார்.

இப்படி முதலீட்டை மடங்குகளாக பெருக்கி தற்போது 8250 கோடிக்கு சொந்தமாக உள்ளார்.  

தற்பொழுது A2Z Maintenance, Titan Industries, CRISIL, Geometric, Lupin Ltd. மற்றும் Karur Vysya Bank போன்ற நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இது தவிர பல நிறுவனங்களில் "Board of director" பதவியில் இருந்துள்ளார்.

2011 பங்குச்சந்தை சரிவுகளில் இவரது பங்குகள் 30% சரிந்தன. ஆனால் 2 வருடங்களில் தமது நஷ்டத்தை ஈடு கட்டினார்.

 இவரது பங்கு முதலீடுகள் நிறுவன வளர்ச்சி, செயல் திறன், போட்டித் திறன், மேலாண்மை போன்றவற்றை மையப்படுத்தி இருக்கும்.

பங்குசந்தை ஏற்ற, இறக்கங்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாதவர். நிறுவனம் நன்றாக போகும் வரை கவலைப் பட அவசியமில்லை என்று கூறுகிறார்.

ரியல் எஸ்டேட் முதலீட்டை விரும்பாதவர்.  ரியல் எஸ்டேட் பங்குச்சந்தை போல் தொடர்ச்சியான வருமானம் ஏற்படுத்தாத ஒன்று என்றும் இந்தியாவில் ரியல் எஸ்டேட் மதிப்பீடல் குறைபாடு உடையதாக கருதுகிறார்.

பங்குகளை சரியான நேரத்தில் சரியான விலைக்கு வாங்குவது இவரது வெற்றிக்கு முக்கிய காரணமாக குறிப்பிடுகிறார்.

இவரைப் போல் ஒரு தமிழனும் பங்குச்சந்தையில் மேல் வர வேண்டும் என்று நாமும் வாழ்த்துகிறோம்!
...................................................
உலகிலேயே மிக அதிகமாக சம்பாதிக்க வாய்ப்பு உள்ள பங்குச்சந்தை பற்றி கற்றுக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுங்கள்!.
உடனே தொடர்பு கொள்ளுங்கள்.
#cell_no_9865656232
-A.S.Rajkumar- (stock Analyst,
NSE authorised person with sspl)
proprietor:
SHARE&CARE 
share market training centre 
shop no;5 nalliyah shopping complex,
thanjavur-1
email; rajkumarshareandcare@gmail.com
பங்குச்சந்தை பற்றி எளிய தமிழில் முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.

பிரபலமான இடுகைகள்